குறுந்தொகை 27

"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே."


பிரிவிடை "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
--வெள்ளி வீதியார்

I don't want to smudge this sacrosanct version by translating :)
I referred to Tamil lexicon developed by University of Madras and here are the meanings

கலம் : பால்கறக்கும் மூங்கிற்குழாய்க் கலம்
நல் ஆன் : நல்ல பசு
என்னை : என் தலைவன்
பசலை : தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் நிறமாற்றம்
திதலை : தேமல்
அல்குல் : இடுப்பு
மாமை : மேனி
கவின் : அழகு

Posted in Labels: , |

0 comments: