படித்ததில் பிடித்தவை - 6
Posted On Saturday, November 27, 2010 at at 9:48 AM by Lokeshநான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.மு.வ உரை:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.சாலமன் பாப்பையா உரை:
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.Translation:
For her with beauteous brow, the maid I love, there place is none;Explanation:
To give her image room, O pupil of mine eye, begone! .
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.
Source:www.thirukural.com
படித்ததில் பிடித்தவை - 5
Posted On Friday, October 29, 2010 at at 11:29 AM by Lokeshபுருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.மு.வ உரை:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.சாலமன் பாப்பையா உரை:
அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.Translation:
If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;Explanation:
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.
படித்ததில் பிடித்தவை - 4
Posted On Tuesday, May 18, 2010 at at 9:41 AM by Lokesh
கலத்தல் உறுவது கண்டு
படித்ததில் பிடித்தவை - 3
Posted On Sunday, February 21, 2010 at at 8:23 AM by Lokeshயான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?.மு.வ உரை:
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.சாலமன் பாப்பையா உரை:
நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.Translation:
I look on her: her eyes are on the ground the while:Explanation:
I look away: she looks on me with timid smile.
When I look, she looks down; when I do not, she looks and smiles gently.
படித்ததில் பிடித்தவை - 2
Posted On at at 8:14 AM by Lokeshஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
படித்ததில் பிடித்தவை - 1
Posted On at at 8:01 AM by Lokeshகண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
திருக்குறள் 1114
Posted On Monday, September 07, 2009 at at 9:43 AM by Lokeshகாணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.